யார் எதிர்த்தாலும் மரண தண்டனை அமுல்படுத்தப்படும்: மகிந்த அமரவீர

Report Print Steephen Steephen in அரசியல்

எந்த தரப்பினர் எதிர்த்தாலும் மரண தண்டனை அமுல்ப்படுத்தப்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை எதிர்க்கும் தரப்பினர் நாட்டின் பெரும்பாலான மக்களின் நலனுக்காக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காதவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

குருணாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்தித் வேலைத்திட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

போதைப் பொருள் பாதிப்பில் இருந்து நாட்டை காப்பாற்ற மரண தண்டனை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மிகப் பெரியளவில் ஹெரோயின் போதைப் பொருளை இறக்குமதி செய்யும் நபர்களை கைதுசெய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.