பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பாதாள உலகத்தினரின் பேச்சாளராக செயற்படுகிறார் - கூட்டு எதிர்க்கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பாக நாட்டில் உள்ள எவரும் மகிழ்ச்சியடைய முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு பதிலாக பாதாள உலகத்தின் ஊடகப் பேச்சாளராக செயற்படுமாறு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

பாதாள உலக செயற்பாடுகளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியாயப்படுத்தி வருகிறார். அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட உயர் மட்டக்குழு பாதாள உலகக்குழுக்களை வழிநடத்துகிறது.

இதனால், பாதாள உலகக்குழுக்களை அரசாங்கத்தினால் அடக்க முடியாமல் போயுள்ளது எனவும் ஷேயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஷேயான் சேமசிங்க,

தயாசிறி ஜயசேகர சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில் அரசியலுக்கு வந்தார். பின்னர் சந்திரிக்காவை கீழ்த்தரமாக விமரசித்து, ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்துக்கொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் கீழ்த்தரமாக விமர்சித்த தயாசிறி ஜயசேகர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்துக்கொண்ட அவர், அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார். பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட தயாசிறி, மகிந்த ராஜபக்சவை விமர்சித்தார்.

இந்த நிலையில், மீண்டும் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்துக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அரசாங்கத்தை விமர்சித்து வருவதுடன் மீண்டும் முன்னாள் ஜனாதிபதியை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார் எனவும் ஷேயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...