தலைவராகிறார் மகிந்த ராஜபக்ச!

Report Print Steephen Steephen in அரசியல்

கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில் உருவாக்கப்படும் விரிவான கூட்டணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை கூறியுள்ளார்.

கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில் விரிவான கூட்டணியை உருவாக்கி, அதில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிரான அனைத்து அணிகளை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

16 பேர் அணியின் அனைத்து உறுப்பினர்களும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எடுத்த முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

தயாசிறி ஜயசேகர உட்பட அனைவரும் கூட்டு எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றோம் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.