விஜயகலா மகேஸ்வரன் கூறியவை அனைத்தும் உண்மை!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

சிறுவர் , பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கூற்றுக்கள் அனைத்தும் உண்மையே என விஜயகலா மகேஸ்வரனின் மைத்துனனும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

விஜயகலா மகேஸ்வரன் இன்று வரை சிவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சராக தான் உள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்து உள்ளார். ஆனால் இன்னமும் அவர் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.

விஜயகலா மகேஸ்வரன் கூறிய கூற்றுக்கள் அனைத்தும் உண்மை. அதில் சில வார்த்தைகள் சட்டத்திற்கு முரணாக இருக்கலாம். அதற்கு சட்ட ரீதியாக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்க நாம் தயார்.

யாழில் குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்த வேண்டுமாயின் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மற்றும் யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்ற நபர் ஒருவர் நெல்லியடி பகுதியில் தங்கி நின்று இராணுவ மற்றும் பொலிஸ் ஆதரவுடன் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். இராணுவ வாகனங்களில் மணல் கடத்தல்கள் கூட இடம்பெறுகின்றது என்றார்.