இலங்கை அரசாங்கம் இதை செய்ய வேண்டும்! தமிழக மீனவர்கள் கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு, சேதமடைந்த படகுகளுக்கு, தலா, 25 லட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதல்வரிடம் வலியுறுத்தினர்.

இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் கையளித்த கோரிக்கை மனுவில், டீசல் விலை, இலங்கை கடற்படை பிரச்னை ஆகியவற்றால், எங்கள் தொழிலோடு, நாங்களும் அழிந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களைக் காப்பாற்ற அவசரகால நடவடிக்கை எடுத்து, உதவ வேண்டும்.

இலங்கை அரசால், 2014 முதல் சிறைபிடிக்கப்பட்ட, 184 படகுகள் பராமரிக்கப்படாமல், அனைத்தும் உபயோகமற்றதாகிவிட்டன. அந்தப் படகுகளின் உரிமையாளர்கள், பிழைப்பின்றி கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்கி உதவுவது போல், சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான நிவாரண உதவி வழங்க வேண்டும்.

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டு, முழுமையாக சேதமான படகுகளுக்கு, தலா, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அண்மையில் மூன்று படகுகளையும், 16 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

இந்த படகுகளை, உடனே மீட்டு தர வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Latest Offers

loading...