மைத்திரியின் அடுத்த அதிரடி திட்டம்!

Report Print Murali Murali in அரசியல்

முப்படையினருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டுக்கு பின்னர் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில், முப்படையினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொலிஸாரின் அதிகாரங்களை வழங்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளை வரையுமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers