முன்னேற வேண்டும் என்றால் ஆளும் கட்சியில் இணைந்து ஆட்சி செய்யும் அரசியல்வாதியை தெரிவு செய்யுங்கள்

Report Print Navoj in அரசியல்

தேர்தலில் தோல்விபெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இருக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவில் பாலையடிவெட்டை நெல்லிக்காடு பிரதேசத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நெல்லிக்காடு தையல் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார், இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேர்தலில் தோல்வி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இருக்கின்றார்கள். தேர்தலில் வெற்றி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிசமான இடங்களில் வாழும் முஸ்லிம் மக்கள்.

அவர்களுடைய தேவை, பசி, எதிர்பார்ப்பு, அவர்கள் வாழ்கின்ற காலத்திற்குள்ளேயே எங்களது பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை, வைத்தியசாலை, நல்ல சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் உட்பட பல விடயங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் யோசிப்பதற்கு முன்பாக கிராமத் தலைவர்கள் யோசிக்கின்றார்கள்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கிராமங்களுக்கு வந்தால் அவர்களிடத்தில் உங்களுக்கு வாக்களிக்கின்றோம் எங்களது பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை, வைத்தியசாலை, நல்ல சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் உட்பட பல விடயங்களை செய்து தாருங்கள் என்கின்றோம்.

அரசியல்வாதிக்கு முஸ்லிம் புள்ளடியா, தமிழ் புள்ளடியா, சிங்கள புள்ளடியா தெரியாது. அவருக்கு எந்த கிராமத்தில் புள்ளடி கிடைக்கின்றதோ அது அவருடைய மக்கள். இதுதான் அரசியல் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். அந்த மாற்றம் உங்களுக்குள் இருந்து வரவேண்டும். உங்களது கிராமம் முன்னேற வேண்டுமாக இருந்தால் ஆளும் கட்சியில் இணைந்து ஆட்சி செய்யக் கூடிய அரசியல்வாதியை தெரிவு செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...