இலங்கை செல்லும் இந்திய வெளிவிவகார செயலர்! முதலில் கூட்டமைப்பை சந்திக்க முடிவு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கை செல்லவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய கேசவ் கோகலே இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை கொழும்பு வரவுள்ளார் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை கொழும்பு செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர், அதிகாரிகளை அவர் நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் தெரிகிறது.

மத்தல விமான நிலைய கூட்டு முயற்சி உடன்பாடு, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், எட்கா உடன்பாடு குறித்தும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே கூடுதல் கவனம் செலுத்துவார் என்றும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாத இறுதியில், இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட விஜய கேசவ் கோகலே இலங்கை செல்லும் முதலாவது பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...