விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின் தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி மீளவும் தேவை என விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தை பார்த்த மாத்திரத்தில் பிழையாக தெரிந்தாலும், அவரது பக்க நியாயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

அந்தவகையில் விஜயகலாவின் பக்க நியாயங்களை முன்வைப்பதற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். எனினும், விஜயகலாவின் கருத்து தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை நடத்தப்படும்.

இதேவேளை விஜயகலாவின் கருத்து மூலம் அரசியல் அமைப்பு மீறப்பட்டுள்ளதா என்பது பற்றி கவனம் செலுத்தப்படும் என அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.