இலங்கை மற்றும் தாய்லாந்து பிரதமர்கள் சந்திப்பு

Report Print Sinan in அரசியல்

தாய்லாந்து பிரதமர் ஜென்ரல் பிரயுத் சான் ஓ சாவும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று காலை சந்தித்துக் கொண்டுள்ளனர்.

தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்து பிரதமரை வரவேற்கும் நிகழ்வில் பல அரச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.