தூக்கிலிடுபவர் பதவிகள் வெற்றிடம்! இது இலகுவான விடயம் அல்ல

Report Print Shalini in அரசியல்

இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கிலிடுபவர் (அலுகோசு) பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

தூக்கிலிடுபவர் (அலுகோசு) பதவி என்பது, கடுமையான அழுத்தத்தை கொடுக்கும் என்பதால், அந்த பதவிக்கு யாரையும் ஆட்சேர்ப்புச் செய்வது இலகுவான விடயம் அல்ல என்று சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1976ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதிக்குப் பின்னர் யாருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இதனால் மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

2015ஆம் ஆண்டு, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் இரண்டு தூக்கிலிடுபவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டனர். எனினும், பின்னர் அவர்கள் தமது பதவியை விட்டு விலகி விட்டனர்.

இந்த நிலையில், மீண்டும் தூக்கிலிடுபவர்களுக்கான இரண்டு வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Latest Offers