நாமல் ராஜபக்சவின் புதிய பொருளாதார கண்டுபிடிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஊழல், மோசடிகளை முற்றாக நிறுத்தினால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வாராந்த பத்திரிகை ஒன்றிட்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நேர்காணலில் ஊடகவியலாளர், நாமல் ராஜபக்சவிடம், எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கும். உண்மையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஊழல்கள் நடக்கவே இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நாமல் ராஜபக்ச,

இலங்கையில் மட்டுமல்ல, உலகில் சகல இடங்களிலும் ஊழல் இருக்கின்றது. ஊடகம், அரசியல் என அனைத்து இடங்களிலும் ஊழல் இருக்கின்றது.

இதனை முற்றாக நிறுத்தினால், பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடையக்கூடும். இதனால், ஊழல்களை குறைப்பதே சரியான முறை.

நான் ஊழலுக்கு உதவ மாட்டேன். அதனை நான் நிராகரிப்பேன். எனினும் அதனை முற்றாக நிறுத்த முடியாது.

அரச நிறுவனங்களுக்கு சென்றாலும் இலஞ்சம் கொடுக்க வேண்டும். இது சகல இடங்களிலும் காணப்படுகிறது. அதனை குறைப்பதுதான் முக்கியம் என நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

Latest Offers