கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்க்கும் எந்த வேட்பாளரையும் தேர்தலில் நிறுத்த முடியாது

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூட்டு எதிர்க் கட்சியினர் எதிர்பார்க்கும் எந்த வேட்பாளரையும் தேர்தலில் நிறுத்த முடியாது என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் - மதவாச்சியில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, கூட்டு எதிர்க்கட்சியில் இணைவதற்காக சென்ற போதிலும் அவர்கள் கூட்டு எதிர்க்கட்சியினரால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் இன்றைய அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனியான அரசாங்கம் இல்லை என்ற போதிலும் நாட்டின் தலைவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பதால், நாட்டுக்கு சேவையாற்ற சந்தர்ப்பம் இருக்கின்றது எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.