இலங்கைக்கு எதிரான போர் குற்ற யோசனையை திரும்ப பெறுமாறு கோரும் நேஸ்பி பிரபு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கு எதிராக போர் குற்றம் சுமத்தப்படும் ஜெனிவா யோசனையை உடனடியாக திரும்ப பெறுமாறு பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினர் மைக்கல் மோரிஸ் பாரோன் நேஸ்பி பிரபு, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவும் போர் குற்றங்களை செய்துள்ளதால், அந்த யோசனையை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அறிவிக்குமாறு நேஸ்பி பிரபு, பிரித்தானிய அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.

பிரித்தானியா, இலங்கை தொடர்பில் கையாண்டு வரும் கொள்கையை தான் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனவும், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் தமிழ் மக்களே கொல்லப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.