சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியில் பிளவு

Report Print Steephen Steephen in அரசியல்
126Shares

16 பேர் அணியில் பெரும்பாலானோர் ஏதாவதொரு அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் இவர்கள் கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் கூறுப்படுகிறது.

எனினும் கூட்டு எதிர்க்கட்சியில் இணையாது எதிர்க்கட்சியில் சுயாதீனமான அணியாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் வேறு ஒரு நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

16 பேர் அணிக்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு காரணமாக, அந்த அணியினர் ஆரம்பித்த சுதந்திரத்தின் மனசாட்சி கூட்டத் தொடர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.