செயற்பாட்டு குழுவிடம் கையளிக்கப்படும் புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு

Report Print Steephen Steephen in அரசியல்

உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு சட்டம் சம்பந்தமான வரைவு எதிர்வரும் புதன் கிழமை கூடும் அரசியலமைப்பு சட்ட செயற்பாட்டு குழுவிடம் கையளிக்கப்படும் என குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்ட செயற்பாட்டுக்குழு மற்றும் ஆறு உப குழுக்களின் அறிக்கைகளில் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வரைவே இவ்வாறு கையளிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் முன்வைத்த வெவ்வேறான யோசனைகளும் வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவானது புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான அடிப்படை ஆவணம் மாத்திரமே எனவும் ஜயம்பதி விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.