மகிந்தவுக்கு சீனா பணம் வழங்கியமை சம்பந்தமான விபரங்களை அடுத்த வாரம் வெளியிடப்படும் - ஜே.வி.பி

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சீனா வழங்கிய பணம் தொடர்பான சகல தகவல்களையும் அடுத்த வாரம் வெளியிடப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகரகமையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்கு சீன, நிறுவனம் வழங்கிய 7.6 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான தகவல்கள் ஆவணங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்திற்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இது சம்பந்தமான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டு வரவுள்ளது.