கோத்தபாயவை சந்திக்க மறுத்த விக்னேஸ்வரன்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்க தான் விரும்பிய போதும் அவர் மறுத்து விட்டார் என்று கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்க வேண்டும் என நான் கேட்டேன்.

அந்தப் பேச்சுக்கு வடக்கு மாகாண முதல்வர் இணங்கினார். நாளும் இடமும், நேரமும் ஒதுக்கப்பட்டன. எனினும் சந்திப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர், விக்னேஸ்வரன் முடியாது என்று கூறிவிட்டார்.

கூட்டமைப்பின் உயர்மட்டத்தரப்பின் கோரிக்கைக்கு அமையவே அவர் அதனை மறுத்தார் என்று குறிப்பிட்டார்.