முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் வருத்தப்படும் மேல் மாகாண முதலமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் தொடர்பில் தான் வருத்தப்படுவதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

தன்னிடம் கேட்காமல் வடக்கில் இராணுவத்தினருக்கு தகவல்களை வழங்க வேண்டாம் என முதலமச்சர் விக்னேஸ்வரன், அரச அதிகாரிகளிடம் அண்மையில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மேல் மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர் இதனை விட புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் வடபகுதி அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படாமை தொடர்பிலும் தாம் கவலையடைவதாகவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.