மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு: பயங்கரமான காட்டிக்கொடுப்பு என்கிறார் விமல்

Report Print Steephen Steephen in அரசியல்

மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதானது இந்திய - இலங்கை உடன்படிக்கையை விட மிகப் பயங்கரமான காட்டிக்கொடுப்பு என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனை கூறியுள்ளார்.

மத்தள விமான நிலையத்திற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஆயிரத்து 600 ஏக்கருக்கு மேலதிகமாக மேலும் 24 ஆயிரம் ஏக்கர் சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது.

அத்துடன் மேலும் 40 ஆயிரம் ஏக்கர் காணியை மத்தள விமான நிலையத்திற்கு அருகில் பாதுகாப்பு வலயமாக ஒதுக்கவும் அரசாங்கம் இணங்கியுள்ளது.

கடல் கரை வரை இருக்கும் இந்த நிலத்தை அளவிடும் பணிகள் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் விமானப் புகைப்பட தகவல்களை அடிப்படையாக காண்டு குறித்த நிறுவனம் அளவிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாகி மேற்கொள்ளப்படும் இந்த காட்டிக்கொடுப்பானது இந்திய - இலங்கை உடன்படிக்கையை விட பாரதுரமான காட்டிக்கொடுப்பாக வரலாற்றில் பதியப்படும் எனவும் விமல் வீரவங்ச தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.