மக்களின் உணர்வுகளை கேலிக் கூத்தாக்காதீர்கள்: திஸ்ஸ விதாரண அறிவுரை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

காணாமல்போனோர் அலுவலகத்தினர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவுகளின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் குழுவினர் தொடர்பாக கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர்,

தற்போது தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் முற்றிலும் மாறுப்பட்டதாகவே காணப்படுகின்றது.

மேற்குலக அழுத்தங்களின் காரணமாகவே குறித்த ஆணைக்கழு நியமிக்கப்பட்டுள்ளது. இது ஏனைய ஆணைக்குழுக்களை விட அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே காணாமல்போனோர் அலுவலகத்தினர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவுகளின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்க வேண்டாம்.

பாதிக்கப்பட்ட மக்கள் நியாயங்களை வேண்டி நிற்பது ஏற்றுக் கொள்ள கூடியது. எனவே பொய்யான வாக்குறுதிகளை குறிப்பிட்டு காணாமல்போனோரின் உறவினர்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என்றார்.