கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியமில்லை! டிலான் பெரேரா

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டுமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாக காணப்படுகின்றது.

இருப்பினும் இவ் விடயததிற்கு ஆதரவு வழங்க போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவினர் தீர்மானித்து விட்டனர்.

மறுபுறம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதிய அரசியலமைப்பு சீர்திருததம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை விருப்பினை பெற வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும் தேவையான வாக்குவாதம் செய்கின்றனர்.

இந் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முறையைற்ற பொருளாதார கொள்கைகளே இன்று நாட்டில் பொருளாதார வீழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கூட்டரசாங்கம் கலைக்கப்பட்டால் மாத்திரமே மீண்டும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி சுதந்திர கட்சியினை பலப்படுரத்துவதே எமது தற்போதைய அரசியல் நோக்கம்.

எனவே மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்றார்.