தைிகளுக்கு உதவும் சிறைச்சாலை அதிகாரிகளை தூக்கிலிட வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

Report Print Steephen Steephen in அரசியல்

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தவாறு பல குற்றச் செயல்களை வழிநடத்தும் கைதிகளை போன்று கைதிகளுக்கு அவற்றை செய்த உதவும் சிறைச்சாலை அதிகாரிகளையும் தூக்கிலிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைச்சாலையில் கடமையாற்றும் சில அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் மூலம் அவர்கள் மறைமுகமாக பாதாள உலக செயற்பாடுகளுக்கு உதவி வருகின்றனர் எனவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தலில் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் பெரும்பாலானோர் வறுமை காரணமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட கீழ் வகுப்பை சேர்ந்தவர்கள்.

பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பெரும்புள்ளிகள் பலர் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பின் பிரதானிகளின் உதவியுடன் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்த பெரும்புள்ளிகளை அரசாங்கம் முதலில் தூக்கிலிட வேண்டும்.

மேலும் திடீரென கோடிஸ்வரர்களாக மாறியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.