பெரும் பரபரப்புக்கு மத்தியில் வழங்கப்பட்ட மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரங்கள்!

Report Print Murali Murali in அரசியல்

போதைப்பொருள் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விபரங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் நீதியமைச்சுக்கு வழங்கியுள்ளது.

இதன்படி, 18 மரணதண்டனை கைதிகளின் விபரங்கள் நீதிஅமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.என்.சீ. தனசிங்க உறுதிசெய்துள்ளார்.

மேலும், அலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு அடுத்த வாரம் முதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஒரு தரப்பு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பிறிதொரு தரப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையிலேயே தற்போது போதைப்பொருள் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 சிறைக் கைதிகளின் விபரங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் நீதியமைச்சுக்கு வழங்கியுள்ளது.