நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளதை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்

Report Print Ajith Ajith in அரசியல்

நாட்டில் பணப்புழக்கம் குறைவடைந்ததன் காரணமாக பொதுமக்களின் பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கம்பெரலிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் கிராமங்களின் ஊடாக பணப்புழக்கத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட வரட்சி காரணமாக மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவேதான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையை பார்க்கமுடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில வரி விதிப்புக்கள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.