மஹிந்த ராஜபக்சவுக்கு சீனா வழங்கிய நிதி தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Report Print Ajith Ajith in அரசியல்
100Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக சீனாவின் நிறுவனம் வழங்கிய நிதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்த சீன நிறுவனம், 2015 ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு நிதிகளை வழங்கியுள்ளது.

இதன்படி 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு காலத்தில் 1398 மில்லியன் ரூபா பெறுமதியான 82 காசோலைகள் மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்துக்கு பரிமாற்றப்பட்டுள்ளன.

குறித்த காசோலைகள் யாவும் தற்போது விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்