விஜயகலா விவகாரத்தால் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள நிலை?

Report Print Shalini in அரசியல்

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு தற்காலிகத் தடை விதிப்பதற்குப் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டபோது அமைதியற்ற முறையில் செயற்பட்டதுடன், செங்கோலையும் எடுப்பதற்கு முயற்சித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை நேற்று நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சிறப்புரிமைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த பிரசன்ன ரணவீர, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பிரகாரம் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு குறைந்தபட்சமாக 4 வாரங்களுக்கு தடை விதிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசன்ன ரணவீரவிற்கு தற்காலிகத் தடை விதிப்பதற்குப் பரிந்துரையை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.