கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள ஆற்றங்கரையில் மீன்பிடிப்பதற்கு அனுமதி

Report Print Mohan Mohan in அரசியல்

முல்லைத்தீவு - வட்டுவாகல் ஆற்றில் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள ஆற்றங்கரை பகுதியில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் படகில் சென்றும் வீச்சு வலை வீசுவதற்கு மீனவர்களுக்கு அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று தொடக்கம் குறித்த பகுதியில் தெப்பம் கொண்டு வீச்சுவலை வீசி மீன்பிடிப்பதற்கு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் அனுமதி கொடுத்துள்ளது.

இது தொடர்பில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த பகுதியில் மீன் குஞ்சுகளின் பெருக்கத்திற்காக இதுவரை வீச்சுவலை வீசி தெப்பத்தில் சென்று மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

16.07.2018 தொடக்கம் 31.12.2018 வரை 96 கடற்தொழிலாளர்களுக்கு தொழில் செய்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகளவான கடற்தொழிலாளர்கள் வீச்சுவலை கொண்டும் தெப்பத்தில் சென்றும் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது