விஜயகலா விவகாரம்! கொழும்பிலிருந்து சென்று முதலமைச்சரின் வீட்டிற்குள் நுழைந்த குழு

Report Print Shalini in அரசியல்

விடுதலைப்புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பிலிருந்து இன்று காலை சென்ற திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் விசேட குழுவினரே இந்த விசாரணையை முன்னெடுப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வடமாகாண அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடமும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அண்மையில் விடுதலைப்புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவிக்கும் போது அவ்விடத்தில் இருந்த ஏராளமானவர்களிடம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.