வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதா? வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் பதில்

Report Print Sumi in அரசியல்

வடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா என்று யாழில் ஊடகவியலாளார் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட வடக்கு முதல்வர்,

அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்க முடியும். ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச் செய்தே எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிடலாம் என்றும் கூறியுள்ளார்.

மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில், முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை நீக்கியது பற்றி பிரசுரிக்காமையினால் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை சார்பாக ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாத போது அந்த விடயத்தினை முன்வைத்து வடமாகாணசபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது.

அவைத்தலைவர் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாம் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.