வீண் அச்சப்பட வேண்டாம்! அரசாங்கத்திற்கு நம்பிக்கை கொடுக்கும் சம்பந்தன்

Report Print Murali Murali in அரசியல்

வீணாக அச்சம் கொண்டு சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான உடன்படிக்கையை கைவிடக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான உடன்படிக்கையை தைரியமாக முன்னெடுத்து அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

ஒருபோதும் பின்னோக்கி செல்லக் கூடாது. அவர்கள் எமக்கு கொடுக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

எட்கா போன்ற உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அதில் தடைகளும் இருந்தன. ஆனால் இவற்றை கருத்தில் கொண்டால் நாம் முன்னேற முடியாது. நாம் மிகவும் பின்தங்கி இருக்கின்றோம்.

ஆகையினால் இந்த உடன்படிக்கைகள் எமக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது. சிங்கப்பூர் உடனான உடன்படிக்கையின் போது முரண்பாடுகள் இருந்தால் அவற்றை அரசாங்கம் திருத்திக்கொள்ள வேண்டும்.

குறித்த உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தி அதன் மூலமாக நாட்டுக்கு நன்மைகளை கொண்டுவர வேண்டும்.

தைரியமாக இந்த உடன்படிக்கைகளை முன்னெடுத்து நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்” என இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.