இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் தூக்கிலிட முடியுமா?

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்த முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசாங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இதனை திசை திருப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அதில் ஒரு அங்கமாகவே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தண்டனையை நிறைவேற்ற போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், அத்தண்டனையை அமுல்படுத்த முடியாது. நாட்டில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால், அது சர்வதேசத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கு முரணானதாக அமைந்து விடும்.

மேலும், தண்டணை விதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர்.

அத்தீர்ப்பு வரும் வரையில் தண்டணை நிறைவேற்ற முடியாது. எவ்வாறாயினும், நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் யாரையும் தூக்கிலிட முடியாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.