அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலகுணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், அவருக்கு சேறுபூசும் வகையிலும், போலியான தகவல்களை அமைச்சர் மங்கள சமரவீர மங்கள மத்தியில் தெரிவித்து வருகின்றார்.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வரக் கூடிய நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர இருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகையினால், அமைச்சர் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலகுணவர்தன் மேலும் தெரிவித்தார்.