மகிந்த ராஜபக்ச சிங்கப்பூரில் ஆனால் இங்கே என்னவென்றால்? இது சரியா?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மஹிந்த ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் இருக்கையில் கூட்டு எதிர்க்கட்சியினர் சிங்கப்பூருடன் கைச்சாத்திட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடுவதில் எந்தவொரு பிரயோசனமும் இல்லை என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளையில் இன்று கலந்து கொண்டு விவாதிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது பேசிய அவர்,

சிங்கப்பூருடனான ஒப்பந்ததினூடாக குப்பை எடுத்து வரப்போவதாக கூறுகின்றனர். வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு குப்பை எடுத்து வர முடியாது. அப்படி எடுத்து வருவதற்கு சட்டத்தில் இடமில்லை. அப்படி குப்பை கொண்டு வர முடியுமாயின் எமக்கு சிங்கப்பூருக்கு குப்பை கொண்டு செல்ல முடியும்.

சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டு 15 வருடங்களுக்கு நாட்டை இப்படியே வைத்துக்கொள்ளவே முற்படுகின்றனர்.

இந்த ஒப்பந்ததினூடாக தொழிலாளர் வந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது இதனை பேசும் போது மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரில் உள்ளார். ஆகவே இதற்கு மேல் பேசி ஒன்றும் பிரயோசனமில்லை.

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருக்கையில் இவர்கள் இவ் ஒப்பந்தம் குறித்து பேசுவது வேடிக்கையானது மாத்திரமல்ல, எந்தப் பிரியோசனமும் அற்றது என்றார்.