ஜனாதிபதி வேட்பாளராக நாமல் தான் களமிறங்குவார்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக்கப்படுவார் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பில் பேசிய அவர்,

ராஜபக்ச குடும்பத்தில் நாமலுக்கு அன்றி வேறு எவருக்கும் இந்த வேட்பாளர் பதவி வழங்கப்பட மாட்டாது. ராஜபக்ச சகோதரர்கள் எவருக்கும் இந்தப் பதவி வழங்கப்பட மாட்டாது என நான் இன்று கூறியதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இது நடைபெறாது என்பதனால் தான் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் ஜனாதிபதி அபேட்சகர்கள் யார் என்பதைத் தெரியாது ஒவ்வொருவரையும் கூறிக் கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.