போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி

Report Print Evlina in அரசியல்

போதைப்பொருள் விநியோகத்தை இல்லாது ஒழிப்பதன் மூலமாக போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி அளித்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவ மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகம் முடக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் அன்று போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மாத்திரம் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கப்பட்டார்கள்.

பெருமளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.