மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

Report Print Evlina in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் பிறப்பித்துள்ளார்.

நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு விசாரணை நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது , எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் சாட்சியாளர்களை மன்றில் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரளை - கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.