இலங்கை வந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள நிலை! ஒரு மாத காலம் உள்நுழைய தடை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒருமாத காலம் பாராளுமன்றத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Ian Paisley என்பவருக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

2313ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் Ian Paisley தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதற்கான முழுச் செலவையும் இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது.

சுமார் ஒரு லட்சம் பவுண்ட்ஸ் வரையில் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் பிரித்தானியா பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை மீறியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா பாராளுமன்றின் நிலையியற் குழு இதனை கண்டறிந்துள்ளது. இதனையடுத்து Ian Paisleyக்கு செப்டம்பர் 4ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வரையில் பாராளுமன்றுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Ian Paisley தனது இலங்கை விஜயத்தின் போது 2013 ஏப்ரல் மாதம் ஐந்து பேருடனும், ஜூலை மாதம் மூன்று பேருடனும் இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையின் சுற்றுலாத் தளங்களுக்கு ஹெலிகொப்டர் மூலமே அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விஜயத்திற்கு ஐம்பதாயிரம் புவுண்ட்ஸ் மாத்திரமே செலவாகியுள்ளதாக Ian Paisley ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், இவை இரண்டும் உத்தியோகபூர்வ விஜயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான விஜயங்களுக்கு பிரித்தானியா பாராளுமன்றுக்கு அறிவித்தல் கொடுக்க வேண்டும். எனினும், Ian Paisley அவ்வாறு அறிவித்தல் ஏதும் கொடுத்திருக்கவில்லை்.

மேலும், 650 பவுண்ட்ஸ்களுக்கு மேலான விருத்தோம்பலுக்கு பிரித்தானியா பாராளுமன்றில் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே Ian Paisleyக்கு ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், Ian Paisleyயை பதவி விலகுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers