வட மாகாண பெண் அமைச்சரிடம் துப்பாக்கி? யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறும் சுமந்திரன்

Report Print Sujitha Sri in அரசியல்

மாகாணசபையில் பேசப்படும் விடயங்களை விமர்சிக்க மற்றும் விசாரிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வட மாகாண பெண் அமைச்சரொருவர் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினால் சபையில் வைத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அந்த வட மாகாண பெண் அமைச்சர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர்கள் சுமந்திரனிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.