முல்லைத்தீவில் அபிவிருத்தி புரட்சியின் மழை பொழிய ஆரம்பித்துள்ளது! நிதியமைச்சர்

Report Print Yathu in அரசியல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரின் அபிவிருத்தி புரட்சியின் மழை பொழிய ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட மங்கள சமரவீர முல்லைத்தீவு பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இலங்கையில் வறுமைக்கு உட்பட்ட மக்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்காக அரசு பாரிய நிதிகளை ஒதுக்கி வைத்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி, பிரதமரின் அபிவிருத்தி புரட்சியின் மழை முல்லைத்தீவில் பொழிய ஆரம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.