அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை பல்கலைக்கழகங்களின் சுமார் 500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற நிலையில் அரசாங்கங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை மீறி வெளிநாடுகளிலேயே குறித்த விரிவுரையாளர்கள் தங்கிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விரிவுரையாளர்களுக்கு எதிராகவே சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

குறித்த விரிவுரையாளர்களின் மேற்படிப்புக்காக இலங்கை அரசாங்கம் 800 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது.

இந்த நிலையில் அமரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, நோர்வே, சுவீடன் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்ற விரிவுரையாளர்களே நாட்டுக்கு திரும்பவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

எனவே எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக செல்லும் கல்வியாளர்களுடனான உடன்படிக்கை இறுக்கமாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.