இலங்கையை ஆட்சி செய்யும் அதிகாரம் சுதந்திர கட்சிக்கு மட்டுமே!

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் ஆட்சி உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமே இருப்பதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதிகமான காலம் நாட்டை ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கே கிடைத்தது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது அமைச்சரவையின் முக்கிய பதவிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களே வகித்தனர். இதன் பலனாக மக்களுக்கு சேவை செய்த முடிந்தது எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...