கொள்ளையடித்து நாட்டை முன்னேற்றிய மஹிந்த!

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொள்ளையடித்தார் என்று கூறினாலும் அவர் நாட்டை முன்னேற்றினார் என பேராதனை கெட்டம்பே ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கெப்பட்டிகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்காக விகாரையில் நேற்று நடந்த போதி பூஜையின் போது தர்ம உபதேசம் செய்யும் போதே சிறிவிமல தேரர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்யாது கொள்ளையடித்து வருவதாகவும் நாட்டின் அனைத்து வளங்களையும் விற்பனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.