மீண்டும் புலிகள் தலைதூக்க சந்தர்ப்பமளிக்கப் போவதில்லை: நவின் திஸாநாயக்க

Report Print Thirumal Thirumal in அரசியல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அமைச்சர் நவின் திஸாநாயக்க உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நவின் திசாநாயக்க மற்றும் சஜித் பிரேதமதாச போன்றோரும் மீண்டும் புலிகள் தலைதூக்க சந்தர்ப்பமளிக்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹட்டன், கினிகத்தேனை நகரில் இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்காகவே இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். எனவே அவர்களை பாதுகாக்க நாம் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது மத்திய வங்கி தொடர்பில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான பிரச்சினைகள் ராஜபக்ஸ காலத்தில் ஏற்பட்டிருந்தால் அது மூடி மறைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி அது தொடர்பில் விசேட ஆணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ராஜபக்ச ஆட்சி ஏற்பட ஐ.தே.கட்சி இடமளிக்காது

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்பொழுது பல குறைப்பாடுகள் இருப்பதாகவும், அந்த குறைப்பாடுகளை அடுத்த ஒன்றரை வருடங்களில் நிர்வத்தி செய்துக்கொண்டு 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் சிறந்த வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்ஹேன கூட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் மீண்டும் ராஜபக்ச ஆட்சி ஏற்பட ஐக்கிய தேசியக்கட்சி எந்த வகையிலும் இடமளிக்காது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் விருப்பம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லை.

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது சிதறி வரும் கட்சியாக மாறியுள்ளது எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கையில் தேயிலை ஏற்றுமதிக்கு ஜப்பான் அரசாங்கம் பல நிவாரணங்களை வழங்க உறுதியளித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்தி - ஸ்டீபன்

Latest Offers

loading...