பிரபாகரன் பற்றி பேசாதவர்கள் மகிந்தவுக்கு அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர்: பந்துல குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைத்தூக்க வேண்டும் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஒரு சிறிய சேதம் கூட ஏற்பட இடமளிப்பதில்லை.

இந்த நாட்டை முற்றாக அழித்து, நாட்டை பிணம் தின்னிகளின் தேசமாக மாற்றிய, நாட்டின் சமூக , கலாசார, பொருளாதார சீரழிகளை ஏற்படுத்திய, விடுதலைப் புலிகளின் பயங்கரவாத தலைவர் பிரபாகரனுக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட பேசாதவர்கள், பிரபாகரனிடம் இருந்து நாட்டை காப்பாற்றி, பிளவுப்படுத்தாமல் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என அனைத்து மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த அரச தலைவரான மகிந்த ராஜபக்சவுக்கு ஊடகங்கள் வழியாக அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

அடுத்த வாரம் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். எரிபொருள் தொடர்பில், மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி, கடந்த அரசாங்கத்தின் மீது சேறுபூசும் நோக்கில், மேற்கொண்டு வரும் பிரசாரங்களை நிறுத்தக் கோரி இந்த வழக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.

இது தொடர்பில் எமது சட்டத்தரணிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...