கோடிக்கணக்கில் கிடைத்த வரி நிவாரணங்கள் விற்பனை! மகிந்தவின் முக்கிய சகாவும் உள்ளடக்கம்...

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் தமக்கு வழங்கப்பட்ட சுங்க வரி தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்தவர்களில் பலர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வேறு நபர்களின் பெயருக்கு அனுமதிப்பத்திரம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பெயர் மாற்றி பதிவு செய்து கொண்டுள்ளனர்.

வரி தீர்வையின்றி இறக்குமதி செய்த வாகனங்களை விற்பனை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் கூட்டு எதிர்க்கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

இவர் இறக்குமதி செய்த ரேன்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் ஸ்டேசன் வேகன் என்ற வாகனத்திற்கு 2 கோடியே 79 லட்சத்து 37 ஆயிரத்து 605 ரூபா வரி நிவாரணம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாது இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முக்கியஸ்தருமாக உள்ள உதய கம்மன்பில 3 கோடியே 34 லட்சத்து 57 ஆயிரம் ரூபா வரி நிவாரணத்தின் கீழ் டோயோடா லேண்ட் குரூசர் வாகனத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்துள்ளார்.

சுங்கத் தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 பேரின் பெயர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.