அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! கடுமையாக்கப்பட்டுள்ள சட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டின் தற்போதைய அரசாங்கம் அதன் அமைச்சர்களுக்கு கூட நேரடியாகவும், கடுமையாகவும் சட்டத்தை அமுல்படுத்துவதே அதன் சிறப்பம்சமாகும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது, 2013ம் ஆண்டில் மாத்திரம் 55 ஆயிரம் குற்றச் செயல்கள் நாட்டில் நடந்தன எனவும் அவர் கூறியுள்ளார்.

பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் கதிர்காமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக்குழுக்கள் அல்லது போதைப் பொருள் கடத்தலுடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அதனை சாட்சியங்களுடன் ஒப்புவிக்க வேண்டும்.

அமைச்சர்கள் என்ற வகையில் இந்த விடயத்தில் நேரடியாக செயற்பட கடமைப்பட்டுள்ளோம் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.