இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரம்! மகிந்த கவலை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இராணுவத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்து பொலிஸ் இராஜ்ஜியமொன்று உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துரைத்த அவர்,

இராணுவத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்து பொலிஸ் இராஜ்ஜியமொன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்காக நீதிமன்றமும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த அரசாங்கம் அதிகூடிய அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Latest Offers

loading...