மாவை சில்லறைக்காசு, சம்பந்தன் தாள் காசு, சுமந்திரன் ஒரு சூப்பி! மூத்த தமிழ் அரசியல்வாதி

Report Print Shalini in அரசியல்

மாவை சேனாதிராஜா சில்லறைக்காசு, சம்பந்தன் தாள் காசு என்று வைத்துக்கொள்வோம், சுமந்திரன் ஒரு சூப்பி என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாங்கள் அரசியலில் பழுத்து விழுந்தவர்கள். சுமந்திரன் இப்போதுதான் அரசியலில் ரீதியில் குழந்தை என்றபடியால் சூப்பிக்கொண்டு இருக்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நான்தான் பெரிய சட்டத்தரணி, அரசியல்வாதி என தன்னைப்பற்றி பெரிய சிந்தனை அவருக்கு உள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

நானும் படித்தவன் தான், நானும் ஒரு வழக்கறிஞர் தான். ஆனால் நான் தம்பட்டம் அடிக்கவில்லை. அந்த பதவியைக் கொண்டு எங்கள் தேவைக்கும். எங்கள் இனத்திற்கும் சேவை செய்யவே பயன்படுத்தினேன். தவிற நீதிமன்றம் சென்று சம்பாதிக்கவில்லை எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

Latest Offers