இலங்கைக்கு இந்தியா செய்த மாபெரும் உதவி! ஆனால் இந்தியாவின் பரிதாப நிலை.. வைரலாகும் கருத்துகள்

Report Print Shalini in அரசியல்

இந்திய அரசின் நிதி உதவியுடன் சுவசெரிய அவசர அம்பியூலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த செயற்றிட்டத்திற்கு இந்தியாவின் பல அரசியல் பிரமுகர்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், பலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

“இலங்கையில் தமிழ் மக்களுக்கு சேவையாற்றிட அம்புலன்ஸ் அனுப்பியுள்ளது மோடி சர்கார். பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி.” என நல்லவிதமாகவே பதிவிட்டுள்ளார்.

ஆனால் இவருடைய இந்த பதிவிற்கு பலரும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் அனைவருடைய மனதையும் பாதித்திருக்கின்றது ஒரு பதிவு.

அதாவது ஒடிசா மாநிலம், காலாகேண்டி அருகே தானா மஜ்கி என்பவரின் மனைவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காச நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த மனைவியின் சடலத்தை சொந்த கிராமத்திற்கு எடுத்துச்செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அம்பியூலன்ஸ் வசதி ஏற்படுத்தி தராததால் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி 10 கிலோமீட்டர் வரை நடந்து சென்றார்.

கூடவே அவரது 12 வயது மகளும் அழுதபடியே நடந்து சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இது மட்டுமின்றி இந்தியாவில் பல பிரதேசங்களில் அம்பியூலன்ஸ் இல்லாத நிலையில் உயிரிழந்த உறவுகளின் உடல்களை தோளில் சுமந்து செல்லும் பரிதாப நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே இலங்கைக்கு இந்தியாவின் உதவியுடன் சுவசெரிய அவசர அம்பியூலன்ஸ் வண்டி சேவை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.